மகிந்த கம்மம்பிலஅவர்கள் BA(Hons), M.Soc.Sc.(Birmingham), SLAS(Rtd.) ஆகிய பட்டங்களைக் கொண்டுள்ளார். அவர் அரச கொள்கை, அபிவிருத்தி நிர்வாகம், சமூக அபிவிருத்தி, தொழிற்கற்கைகள், உற்பத்தி திறன் மேம்பாடுமற்றும் நிறுவன இயலுமை விருத்தி ஆகிய விடயங்களில் அனுபவமும் திறமையும் கொண்டுள்ள அதேவேளை அவ்விடயங்கள் தொடர்பான செயற்பாடுகளில் முகாமைத்துவ ஆலோசகராகவும் பயிற்றுவிப்பாளராகவும் பணியாறியுள்ளார்.
அவரது 35 வருட அரச சேவையின் போது அவர் பல நிர்வாக மாவட்டங்கள் மற்றும் பிரிவுகளிலும் சேவையாற்றியுள்ளதுடன் இலங்கை நிர்வாக அபிவிருத்தி இலங்கை நிறுவனத்தின் மேலதிகப் பணிப்பாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகிய பதவிகளை வகித்ததுடன் இளைப்பாறிச்செல்லும் போது தொழில் அமைச்சின் செயலாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். தேசிய உற்பத்தி திறன் செயலகம், தொழிலமைச்சிலுள்ள தொழில் வலையமைப்பு (JobsNet) உள்ளிட்ட மேலும் பல பொதுத்துறை நிறுவன விருத்திகளுக்கு அவர் காரணகர்த்தாவாக விளங்கியுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு (UNHRC) உட்பட சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ஐடுழு) வருடாந்த மகாநாடுகள், ஆசிய உற்பத்தி திறன் நிறுவனம் (ILO) போன்ற சர்வதேச சபைகளில் அவர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். ஓய்வு பெற்றபின்னர் CWEயின் தலைவராகவும், கல்வியமைச்சின் வெளிநாட்டு நிதியீட்டத்திலான செயற்திட்டங்களில் தேசிய ஆலோசகராகவும், உலக வங்கியால் நிதியீட்டப்பட்ட கல்வித்துறை அபிவிருத்திக் கட்டமைப்பு மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களில் கண்காணிப்பு மற்றும் முகாமைத்துவ ஆலோசகராகவும் (ESDFP) அவர் பணியாற்றியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத் திணைக்களத்தில் அதிகாரப்பகிர்வு மற்றும் உள்ளுராட்சி கற்கைகள் மீதான பட்டப்பின் படிப்பு கற்கைநெறியின் இணை கற்கைநெறி ஒருங்கிணைப்பாளராகவும் வருகை தரும் விரிவுரையாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.